Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணாமல் போகுமா காலி முகத்திடல்? – அச்சுறுத்தும் போர்ட் சிட்டி

In இலங்கை
Updated: 07:58 GMT, Feb 8, 2018 | Published: 07:36 GMT, Feb 8, 2018 |
0 Comments
1567
This post was written by : Varshini
port city

‘போர்ட் சிட்டி’ எனப்படும் கொழும்பு துறைமுக நகரத்திட்டமானது, கடந்த மாத இறுதியில் எவ்வாறு காட்சியளித்ததென குறித்த திட்டத்தை முன்னெடுக்கும் நிறுவனம் ஒளிப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ள இந்த ஒளிப்படத்தை உற்று நோக்கும் போது, இத்திட்டம் கொழும்பின் பெரும்பகுதியை ஆக்கிரமிப்பதாக அமைந்துள்ளது. அத்தோடு, முக்கியத்துவம் வாய்ந்த காலி முகத்திடலும் காணாமல் போகும் நிலை ஏற்படுமென சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.

சீன அரசாங்கத்தின் பாரிய நிதி முதலீட்டில் கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் 2013ஆம் ஆண்டு கொழும்பு துறைமுக நகரத் திட்டத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

எனினும், இதனால் ஏற்படும் சூழலியல் பாதிப்பை கருத்திற்கொண்டு, கடந்த 2015ஆம் ஆண்டு தற்போதைய ஆட்சியாளர்கள் பதவிக்கு வந்த பின்னர் இத்திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

அதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் இத்திட்டம் மீள ஆரம்பிக்கப்பட்டு தற்போது அதன் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தில் அம்பாந்தோட்டை துறைமுகமும் கொழும்பு துறைமுக நகரத் திட்டமும் முக்கியமானவையாக அமைந்துள்ளன. இவற்றின் மூலம் சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் மேலோங்கும் என்றும் அதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் ராஜதந்திர ரீதியில் கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், தற்போது இதன் பணிகள் மிக வேகமான முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, கொழும்பை ஆக்கிரமிக்கும் வகையில் இத்திட்டம் தொடர்பான ஒளிப்படம் வெளியாகியுள்ளது.

இத்திட்டங்கள் தொடர்பாகவும் இரு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தக் கோரும் முகமாகவும் ஏற்கனவே சீன தூதுக்குழுக்கள் பல இலங்கையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

பொருளாதார ரீதியிலும் வேலைவாய்ப்பிலும் கொழும்பு துறைமுக நகரத் திட்டம் இலங்கையர்களுக்கு வரப்பிரசாதமாக அமையுமென தெரிவிக்கப்பட்டு வந்தாலும், கடல்சார் வளங்கள் அழிவடைகின்றமை மற்றும் அந்நியரின் ஆதிக்கம் உள்ளிட்ட பல விடயங்களை கருத்திற்கொண்டு இத்திட்டத்திற்கு தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)