Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக உடன்படிக்கைகள் தெளிவற்றவை!

In
Updated: 07:58 GMT, Feb 8, 2018 | Published: 07:57 GMT, Feb 8, 2018 |
0 Comments
1123
This post was written by : Elakkiya

ஐரோப்பிய ஒன்றியத்துடனான அதன் எதிர்கால வர்த்தக உறவு தொடர்பாக பிரித்தானியா இன்னமும் நிச்சயமற்ற தன்மையை கொண்டுள்ளதாக பிரித்தானிய வர்த்தக அமைச்சர் கிரேக் கிளார்க் தெரிவித்துள்ளார்.

நேற்று (புதன்கிழமை) ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, பிரெக்சிற்றுக்கு பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரித்தானியாவின் வர்த்தக உடன்பாடுகள் எவ்வாறு அமையும் என்பதில் அரசாங்கம் தெளிவாக இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். எனினும் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இருதரப்பினரும் ஒப்புக் கொள்ளும் வரையில் இறுதி முடிவுக்கு தாம் உத்தரவாதம் அளிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், கட்டணங்கள் இல்லாமலும், குறைந்தபட்ச விரிசல்களுடன் முடிவை பெற்றுக் கொள்வதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிலைமாற்று காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான கொள்ளையுடன் உடன்படுவதற்கு பிரித்தானியா இணங்கியுள்ளது.

இந்த விடயத்தில், பிரித்தானிய அரசாங்கத்திடமிருந்தான தெளிவுபடுத்தல்களை வர்த்தகர்கள் விரும்புகின்றனர்.

2019 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும்போது பிரித்தானியாவில் 2.7 டிரில்லியன் பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது அவர்களின் அச்சமாக உள்ளது. பிரெக்சிற் ஆதரவாளர்கள் பலர் ஐரோப்பிய ஒன்றிய சுங்க ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக உள்ளனர்.

இவ்வாறிருக்க ஐரோப்பிய ஒன்றியம் பிரித்தானியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக இருக்கும் என்று பிரெக்சிற் எதிர்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது மிகவும் ஆபத்தான பாதை என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg