Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நுவரெலியா மாவட்டத்தில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

In இலங்கை
Updated: 08:44 GMT, Feb 8, 2018 | Published: 08:44 GMT, Feb 8, 2018 |
0 Comments
1160
This post was written by : Risha

நுவரெலியா மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியும், மாவட்ட செயலாளருமான ஆர்.எம்.பி.புஸ்பகுமார தெரிவித்தார்.

2018ம் ஆண்டுக்கான உள்ளுராட்சி மன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 306 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 5 லட்சத்து 62 ஆயிரத்து 25 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா மாநகர சபை, தலவாக்கலை லிந்துலை மற்றும் ஹட்டன் டிக்கோயா ஆகிய நகர சபைகளுக்கும், வலப்பனை, ஹங்குரன்கெத்த, நுவரெலியா, அம்பகமுவ, கொத்மலை மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட கொட்டகலை, அக்கரபத்தனை, நோர்வூட், மஸ்கெலியா ஆகிய பிரதேச சபைகளுக்குமான 504 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

இதேவேளை, வாக்குகளை எண்ணுவதற்கென 490 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்களிப்பு நிலையங்களில் 7479 பேர் கடமையாற்றவுள்ளதோடு, பாதுகாப்புக்காக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸாரும் 1572 பேர் கடமையில் ஈடுப்படவுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg