Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சியின் தலைமைப் பதவிக்கு கரோலைன் முல்ரோனி போட்டி!

In கனடா
Updated: 07:54 GMT, Feb 8, 2018 | Published: 07:54 GMT, Feb 8, 2018 |
0 Comments
1067
This post was written by : Anojkiyan

முன்னாள் கனேடிய பிரதமர் பிரைன் முல்ரோனியின் மகளான கரோலைன் முல்ரோனி, ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

தனது அரசியல் பிரவேசம் குறித்து அவர் மேலும் கூறுகையில், “கடந்த 15 ஆண்டுகளாக லிபரல் அரசின் ஆட்சியே ஒன்ராறியோவில் நடைபெற்று வருகின்றது. அதில் ஒரு புதிய மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டியுள்ளது.

லிபரல் ஆட்சியில் மக்கள் களைத்துப்போய் விட்டனர். அவர்களுக்கு புதியதாக ஒரு அரசாங்கம் தேவைப்படுகின்றது, எனவே அந்த மாற்றத்தில் எனது பெயரை இணைத்துக் கொண்டு பயணிப்பதற்கு நான் தயாராகி விட்டடேன்” என கூறினார்.

பழமைவாதக் கட்சியின் தலைவர் பற்றிக் பிரவுன் பதவி விலகியதை அடுத்து, அந்த பதவிக்காக பல முக்கிய அரசியல்வாதிகளும் போட்டி போடுகின்ற நிலையில், ரொறன்ரோ வழக்கறிஞரும், வர்த்தகரும், நான்கு பிள்ளைகளின் தயாருமான 43 வயது கரோலைன் முல்ரோனி, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg