Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கனேடியர்கள் இருவர் விடுவிப்பு!

In கனடா
Updated: 08:24 GMT, Feb 8, 2018 | Published: 08:24 GMT, Feb 8, 2018 |
0 Comments
1130
This post was written by : Anojkiyan

சிரியாவில் ஹ்றிர் அல்-சாம் எனப்படும் பிரிவினைவாத ஜிகாத்திய குழுவால் தடுத்து வைக்கப்பட்டிருந்த கனேடியர்கள் இருவர், பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேறியுள்ளதாக கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் ஒன்ராறியோவை வதிவிடமாக கொண்ட குறித்த கனேடியர்கள் இருவரும், அங்கிருக்கும் இரண்டு சிறுவர்களை கனடாவுக்கு அழைத்து வருவதற்கு சென்றிருந்த வேளையிலேயே அவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர்.

வழக்கமான ஆயுததாரிகளின் கடத்தலுக்கு உள்ளாகாமல், அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளக் கூடிய நிலையிலேயே இருந்துவந்த குறித்த இரு கனேடியர்களும் தற்போது துருக்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் பாதுகாப்பாக இருப்பதனை உறுதிப்படுத்தியுள்ள கனேடிய அரசாங்கம், அவர்கள் வெகு விரைவில் நாடு திரும்புவார்கள் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg