Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குஜராத்தில் ஒரேமேடையில் 100 ஜோடிகளுக்கு திருமணம்

In இந்தியா
Updated: 08:26 GMT, Feb 8, 2018 | Published: 08:26 GMT, Feb 8, 2018 |
0 Comments
1128
This post was written by : Kemasiya

இந்தியாவில் குஜராத் வதோதராவில் (VADODARA) ஒரேமேடையில் 100 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.

வறுமையில் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளுக்கு நேற்று (புதன்கிழமை) இவ்வாறு இலவசமாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆடம்பர உடை, கலை கலாச்சார நிகழ்வுகளுடன் மிகவும் ஆடம்பரமாக இந்த திருமணமங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன. வறுமையின் பிடியில் வாடி, திருமணத்திற்காக ஏங்கித் தவித்த இந்த ஜோடிகய் இன்று மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் காணப்படுகின்றனர்.

ஆட்டம், பாட்டம் என யாரும் நினைக்காத அளவிற்கு அவர்களது திருமணம் நிடைபெற்றுள்ளது. இதன்போது, ஹெலிகப்டரிலிருந்து திருமண ஜோடிகளுக்கு மலர் தூவி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

திருமணம் குறித்து ஏற்பாட்டாளர் இவ்வாறு கூறுகிறார். இந்த முறையில் திருமணம் செய்ய பலர் விரும்புகின்றனர். அவர்களது இல்லங்களில் இவ்வாறான திருமணத்தை நடத்த முடியாது.

ஞானிகள், பொதுப் பிரதிநிதிகள், மற்றும் விருந்தினர்களின் ஆசிர்வாதங்கள் ஒருமித்து எங்கே கிடைக்கும். இந்த நிகழ்வல் கலந்து கொண்டு திருமணம் முடித்த மணப்பெண் ஒருவர் தன் மகிழ்ச்சியை இவ்வாறு வெளிப்படுத்தினார்.

“நான் ஒருபோதும் இந்த நிகழ்வு இவ்வளவு நன்றாக இருக்கும் என நினைக்கவில்லை. என்றாலும் இப்போது நான் திருமணம் முடித்துவிட்டேன். பலர் இதில் கலந்து கொண்டனர். ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தன. நான் இதற்கு உரிய மரியாதைச் செலுத்துகிறேன்” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg