Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனடாவில் சளிக் காய்ச்சலினால் 120 பேர் உயிரிழப்பு!

In கனடா
Updated: 08:39 GMT, Feb 8, 2018 | Published: 08:39 GMT, Feb 8, 2018 |
0 Comments
1151
This post was written by : Anojkiyan

கனடாவில் நடப்பு ஆண்டின் இதுவரையான காலத்தில் மாத்திரம் குறைந்தது சளிக் காய்ச்சலினால் 120 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் மாதமான ஜனவரியில் மாத்திரம், அல்பேர்ட்டாவில் 46 பேரும், மனிட்டோபாவில் 17 பேரும், நோவா ஸ்கொட்ஷியாவில் 27 பேரும் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, ஒன்ராறியோவின் வின்ட்சர் பகுதியில் எட்டு பேரும், வோட்டலூ பகுதியில் ஒன்பது பேரும், லண்டன் பகுதியில் 19 பேரும் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இந்த சளிக்காய்சலுக்கான இன்ஃபுளூவன்சா தொற்று அமெரிக்காவிலும் தீவிரமடைந்துள்ளதுடன், அது விரைவில் தணிவதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg