Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதல் நாளே தடுமாற்றம்: முதல் இன்னிங்ஸிற்காக இலங்கை அணி 222 ஓட்டங்கள் குவிப்பு

In கிாிக்கட்
Updated: 09:35 GMT, Feb 8, 2018 | Published: 09:34 GMT, Feb 8, 2018 |
0 Comments
1238
This post was written by : Anojkiyan

பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 222 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

இன்று (வியாழக்கிழமை) டாக்கா மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய இலங்கை அணி, பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 222 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக குசல் மெண்டிஸ் 68 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் அப்துர் ரஸ்ஸாக் மற்றும் தைஜூல் இஸ்லாம் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தற்போது பங்களாதேஷ் அணி, தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வருகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg