Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இங்கிலாந்தில் செல்லப்பிராணி விற்பதற்கு மூன்றாம் தரப்பினருக்கு தடை

In
Updated: 09:32 GMT, Feb 8, 2018 | Published: 09:32 GMT, Feb 8, 2018 |
0 Comments
1075
This post was written by : Elakkiya

இங்கிலாந்தில் செல்லப்பிராணிகள் கடைகளிலும் மூன்றாம் தரப்பினராலும் நாய்க்குட்டிகள் விற்பனை செய்யப்படுவது அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், வளர்பாளர்கள் அல்லது வீட்டு மையங்களிலிருந்து மாத்திரமே நாய்க்குட்டிகளை வாங்குதல் அல்லது தத்தெடுப்பதானது சாத்தியமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த சுற்றுச் சூழல் அமைச்சின் செயலாளர், நலன்புரி தரத்தை உயர்த்துவதை நோக்கமாக கொண்ட புதிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த திட்டம் பரிசீலிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறிருக்க வளர்பாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட உரிம நிபந்தனைகள் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துள்ளது.

பதிய விதிமுறைகளின் பிரகாரம், வளர்ப்பாளர்கள் அல்லது விற்பனையாளர்கள் அதற்கான உரிமத்தை பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது. அதேவேளை பிறந்து எட்டுவாரங்களுக்கு உட்பட்ட நாய்க்குட்டிகளையோ பூனைகளையோ விற்பனை செய்ய முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)