Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு: அறிவியல்-ஆராய்சிக்காக அதிக நிதி ஒதுக்கீடு

In கனடா
Published: 09:57 GMT, Feb 8, 2018 |
0 Comments
1040
This post was written by : Anojkiyan
scientist-lab

நடப்பு ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அடிப்படை அறிவியல் மற்றும் ஆராய்சிக்காக அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று நீண்ட காலமாகவே கனடாவின் ஆராய்ச்சித் துறையினர் எதிர்பார்ப்பு கொண்டுள்ளதுடன், தமக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு கோரிக்கையும் விடுத்து வருகின்ற நிலையில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அவ்வாறு அடிப்படை அறிவியல் ஆராய்சிக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்பது ஓரளவுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு மற்றும் அதன் கால வரைமுறை என்பன தொடர்பிலான விபரங்கள் வெளியாகவில்லை.

கனடாவின் நடப்பு ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்னும் சில வாரங்களில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)