Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஊபர் பயனாளிகளின் விபரங்கள் திருடப்பட்ட விவகாரத்தில் கனேடியர் ஒருவருக்கு தொடர்பு!

In கனடா
Published: 10:05 GMT, Feb 8, 2018 |
0 Comments
1044
This post was written by : Anojkiyan
File illustration picture showing the logo of car-sharing service app Uber on a smartphone next to the picture of an official German taxi sign

ஊபர் வாடகை வாகனச் சேவையினைப் பெற்றுக்கொள்ளும் பயனாளிகளின் விபரங்கள் திருடப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் கனேடியர் ஒருவர் தொடர்பு பட்டுள்ளதாக ஊபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுமார் 57 மில்லியன் பயனாளிகளின் பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள், கைத்தொலைபேசி இலக்கங்கள் என்பன உள்ளிட்ட விபரங்கள் இணையம் ஊடாக கடந்த 2016ஆம் ஆண்டு திருடப்பட்ட நிலையில், அந்த திருட்டுச் செயலில் இருவர் சம்பந்தப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பின்னர் இந்த திருட்டில் ஈடுபட்ட அந்த இருவரில் ஒருவர் கனடாவில் இருந்தே அந்த திருட்டை மேற்கொண்டதாக ஊபர் நிறுவனம் தற்போது தகவல் வெளியிட்டுள்ளது. அதேவேளை மற்றைய நபர் ஃபுளோரிடாவில் இருந்து செயற்பட்டதாகவும், அவரிடமே இந்த திருடப்பட்ட தகவல்கள் அனைத்தும் போய்ச் சேர்ந்துள்ளதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)