Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஊழலைக் கண்டுபிடிக்கும் புதிய ரோபோ!

In
Updated: 10:43 GMT, Feb 8, 2018 | Published: 10:43 GMT, Feb 8, 2018 |
0 Comments
1125
This post was written by : Litharsan

மனிதர்கள் செய்யும் ஊழல்களைக் கண்டுபிடிக்கும் புதிய ரோபோவை ஸ்பெயின் நாட்டின் வல்லாடோலித் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

இந்த ரோபோ செயற்கை நுண்ணறிவுத் தொழிநுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவிடம் நாம் வியாபாரம் குறித்தோ அல்லது அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தோ தகவல் கொடுத்தால் அதில் ஊழல் ஏதும் நடந்துள்ளதா? என்பதைக் கண்டறியும்.

இந்த ரோபோவில் இதுவரை நடந்த ஊழல்கள் தொடர்பான விடயங்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கும். அந்தப் பதிவுகளையும் நாம் கொடுத்த தகவல்களையும் சரிபார்த்து ஊழல் நடந்துள்ளதா? இல்லையா? எனக் கண்டபிடிக்கும் திறனை இந்த ரோபோ கொண்டுள்ளது. அதேவேளை எந்தளவிற்கு தவறுகள் நடந்துள்ளது என்பதன் சதவீதத்தைக் கொண்டு ஊழல் நடப்பதற்கான தன்மையை இந்த ரோபோ வெளிக்காட்டும்.

இவ்வாறு தயாரிக்கப்பட்டுள்ள இந்த ரோபோவில் தற்போது ஸ்பெயின் நாட்டில் கடந்த 2000ஆம் ஆண்டுக்குப் பின்னரான ஊழல் குறித்த தகவல்கள் பதியப்பட்டு பரீட்சிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg