Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஏறாவூரில் பெண் வேட்பாளர்களை தாக்கிய சந்தேகநபர் கைது!

In இலங்கை
Updated: 12:04 GMT, Feb 8, 2018 | Published: 10:46 GMT, Feb 8, 2018 |
0 Comments
1266
This post was written by : Risha

ஏறாவூர் நகர சபைக்காக போட்டியிடும் பெண் வேட்பாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (புதன்கிழமை) குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு நீதிமன்றில் முன்னிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அணியின் தாமரை மொட்டு சின்னத்தில் பொதுப் பட்டியலில் போட்டியிடும் வேட்பாளரும், ஆதரவாளர்களுமே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் மூன்று பெண்கள் காயமடைந்த நிலையில், ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்கப்பட்டவர்களுள் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg