Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு

In இந்தியா
Updated: 11:30 GMT, Feb 8, 2018 | Published: 11:30 GMT, Feb 8, 2018 |
0 Comments
1182
This post was written by : Kemasiya

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டுவதற்காக தமிழக அரசு கோரியிருந்த 5000கோடி ரூபா நிதியினை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

இன்று (வியாழக்கிழமை) குறித்த கோரிக்கைக்கு நிராகரிப்பு அறிக்கையை முன்வைத்துள்ளது மத்திய அரசு.

ஓஹி புயலின் தாக்கத்தை தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு வீடு அமைப்பதற்காக குறித்த நிதியை கோரியிருந்தது தமிழக அரசு.

புயலின் தாக்கத்தினால் பொருளாதார ரீதியல் இழப்புக்களை சந்தித்த தமிழக மக்கள் தமது விவசாயம் மற்றும் மீன்பிடி ஆகிய தொழில்களை மேற்கொண்டு செய்வதற்கும், இழந்த வீடுகளை மீள்கட்டியெழுப்பவும் தமிழக அரசை வலியுறுத்தி வருகிறனர்.

இந்நிலையில் தமிழக அரசினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்கு அமைவாக மத்திய அரசிடம் மேற்குறித்த நிதி கேட்டு கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த நிதியை வழங்க மறுத்து இன்று பதில் அறிக்கையை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg