Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நுவரெலியா மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் இதுவரையில் 125 முறைப்பாடுகள் பதிவு!

In இலங்கை
Updated: 12:05 GMT, Feb 8, 2018 | Published: 11:28 GMT, Feb 8, 2018 |
0 Comments
1058
This post was written by : Anojkiyan

நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் இதுவரையில் 125 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக நுவரெலியா மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியும், மாவட்ட செயலாளருமான ஆர்.எம்.பி.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

குறிப்பாக உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் வேட்பாளர்களால் முன்னெடுக்கப்ட்ட தேர்தல் பிரச்சாரங்களின் போது, வேட்பாளருக்கு ஆதரவு தேடி 10 பேர் மாத்திரமே செல்லாம் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்திருந்த போதிலும், தேர்தல் சட்டத்துக்கு மாறாக 10ற்கும் மேற்பட்ட நபர்கள் வேட்பாளருக்கு ஆதரவு தேடி பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளனர். இவ்வாறான முறைபாடுகளே அதிகமாக பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகளை பொலிஸாரும், தேர்தல் அலுவலர்களுக்கும் மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg