Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுதந்திர கிண்ண தொடரின் ஊடாக ஒரு கோடி ரூபாய் வருமானம் எதிர்பார்த்துள்ள கிரிக்கெட் சபை!

In கிாிக்கட்
Updated: 11:37 GMT, Feb 8, 2018 | Published: 11:37 GMT, Feb 8, 2018 |
0 Comments
1126
This post was written by : Anojkiyan

இலங்கையின் 70வது சுதந்திரதினத்தை முன்னிட்டு நடத்தப்படும் முத்தரப்பு ரி-ருவென்ரி சுதந்திர கிண்ண தொடரின் ஊடாக ஒரு கோடி ரூபாய் வருமானம் எதிர்பார்த்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

தற்போது இதற்கான ஆயத்த பணிகள் துரிதமாக இடம்பெற்று வருவதாகவும் குறித்த வருமானத்தை தம்மால் எட்ட முடியும் எனவும் கிரிக்கெட் சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் முத்தரப்பு ரி-ருவென்ரி தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

7 போட்டிகளைக் கொண்டதாக நடைபெறவுள்ள இப்போட்டித் தொடரில் விளையாடும் மூன்று அணிகளும் தங்களுக்குள் இரண்டு முறை மோதவுள்ளன. இதில் வெற்றி பெற்று முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் மோதவுள்ளன.

கடந்த 1998ஆம் ஆண்டு இலங்கையின் 50வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பங்கேற்ற சுதந்திரக் கிண்ணத்தில், அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணியை 6 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றி கொண்டது.

1997ஆம் ஆண்டு இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சுதந்திர கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சம்பியன் பட்டத்தை வென்றிருந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg