Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொலிஸாரின் தடைக்கம்பியில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு

In இந்தியா
Updated: 12:09 GMT, Feb 8, 2018 | Published: 11:43 GMT, Feb 8, 2018 |
0 Comments
1234
This post was written by : Kemasiya

பொலிஸ் நிலைய வீதியில் குறிக்கே கட்டப்பட்டிருந்த கம்பியில் சிக்குண்டு அபிஷேக் குமார் என்னும் இளைஞர் உயிரிழந்துள்ளார்.

டெல்லியில் நேற்று (புதன்கிழமை) இரவு, வேலை முடித்து வீடு திரும்பிய 21 வயதுடைய குறித்த இளைஞன் குறுக்காக கட்டப்பட்டிருந்த கம்பியை அவதானிக்காது மோட்டர் வண்டியில் சென்ற போது கம்பியில் சிக்கி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இவர் நேற்று இரவு ஒருமணியளவில் இச்சம்பவத்திற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வீதியில் மின்வெளிச்சம் எதுவும் இல்லாத நிலையில், கம்பிகள் கட்ப்பட்டிருந்தமையினாலே விபத்து ஏற்பட்டுள்ளதாக இதுவரையிலான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை டெல்லி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg