Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீனாட்சி அம்மன் ஆலயத்தை சுற்றியுள்ள கடைகளை உடனடியாக அகற்ற நீதிமன்றம் உத்தரவு

In இந்தியா
Updated: 12:10 GMT, Feb 8, 2018 | Published: 12:10 GMT, Feb 8, 2018 |
0 Comments
1123
This post was written by : Kemasiya

மதுரை மீனாட்சி அம்மன் ஆலய வளாகத்திற்குள் அமையப்பெற்றுள்ள அனைத்து கடைகளையும் அவ்விடங்களில் இருந்து நீக்குமாறு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த கடைகளை உடனடியாக நீக்குமாறு மதுரை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (வியாழக்கிழமை) மதியம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த மனுவை விசாரித்த நீதிபதி, “கடைகளை அகற்ற நோட்டீஸ் பெற்ற அனைவரும் நாளை பிற்பகல் 12 மணிக்குள் கடைகளை அகற்ற உத்தரவிட்டார்.

பொருட்களை எடுத்து கோவில் நிர்வாகம் கூறும் இடத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும். மூன்று வாரங்களுக்குள் பொருட்களை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்த அவர் விசாரணையை மூன்று  வாரங்களுக்கு ஒத்திவைத்தார்”

இதேவேளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,

“கடைகளை அகற்றும் வணிகஸ்தர்களுக்கு 2லட்சம் ரூபாய் வழங்கப்படும். அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் 72ஆவது கடையில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக 19கடைகள் எரிந்து சாம்பலாகியுள்ளன.

ஆலயத்தின் நிர்வாகத்தின் அசமந்த போக்கே குறித்த விபத்து ஏற்படுவதற்க காரணம்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg