Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிரியாவில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பை வலுப்படுத்த ரஷ்யா- துருக்கிக்கு இடையில் இணக்கம்

In ஐரோப்பா
Updated: 12:30 GMT, Feb 8, 2018 | Published: 12:29 GMT, Feb 8, 2018 |
0 Comments
1106
This post was written by : Elakkiya

சிரியாவில் இராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்கு ரஷ்யா மற்றும் துருக்கிக்கு இடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் ஆகியோருக்கு இடையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது மேற்படி இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக கிரெம்ளின் அறிக்கையிட்டுள்ளது.

கிரெம்ளின் அறிக்கையின் பிரகாரம் இருநாட்டு தலைவர்களுக்கும் இடையிலான உரையாடலின் போது, சிரிய பிரச்சினை, இட்லிப் மற்றும் அப்ரின் பிராந்திய நிலைமைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யுத்தநிறுத்த உடன்படிக்கையை மீறும் பயங்கரவாத குழுக்களை எதிர்த்து போரிடுவதற்காக ஆயுதப்படைகளின் செயற்பாடுகள் மற்றும் துருக்கியின் சிறப்பு சேவைகள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவதற்கு இணக்கம் காணப்பட்டது.

அத்துடன், ரஷ்யா, துருக்கி மற்றும் சிரியாவுக்கு இடையில் புதிய தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டுள்ளது.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg