Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

11 இளைஞர்கள் காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு!

In இலங்கை
Updated: 15:29 GMT, Feb 8, 2018 | Published: 15:29 GMT, Feb 8, 2018 |
0 Comments
1058
This post was written by : Litharsan

இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் உள்ளிட்டோருக்கு எதிரான விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து விலக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான வழக்கு கொழும்பு, கோட்டை நீதிமன்றில் நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படைப் பேச்சாளர் டீ.கே.பி.தஸநாயக்க உட்பட 9 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

அவர்களுள் கடற்படைப்பேச்சாளர் உட்பட 7 பேருக்கு பிணையில் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டதுடன் 8 ஆம் மற்றும் 9 ஆம் பிரதிவாதிகள் மீதான விளக்கமறியல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவ்வழக்கின் சந்தேகத்துக்குரியவரான வெளிநாட்டிலுள்ள கட்டளை அதிகாரி பிரசாத் ஹெட்டியாராச்சி என்பவர் இலங்கைக்கு வருகை தந்தால் அவரைத் தடுத்து வைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு ஆணையாளருக்கு நீதிவான் உத்தரவிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg