Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வன இலாகா அதிகாரி கைது!

In இலங்கை
Updated: 16:45 GMT, Feb 8, 2018 | Published: 16:45 GMT, Feb 8, 2018 |
0 Comments
1087
This post was written by : Litharsan

வவுனியாவில் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் வன இலாகா அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வவுனியா, நெடுங்கேணி பிரிவுக்குட்பட்ட வன இலாகா அதிகாரியே இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பில் இருந்து வருகை தந்த இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மரம் வெட்டுவதற்கான அனுமதி வழங்குவதற்காக இலஞ்சம் பெற்ற நிலையில் வவுனியா, நெடுங்கேணி பிரிவுக்குட்பட்ட வெடிவைத்தகல் பகுதியில் வைத்து இவர் கைதுசெய்யப்பட்டார்.

மேலும் குறித்த அதிகாரியை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg