Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வன்முறையைக் கையாண்டே மட்டக்களப்பில் முன்னர் ஆட்சியமைக்கப்பட்டது – ஞா.சிறிநேசன்

In இலங்கை
Updated: 17:30 GMT, Feb 8, 2018 | Published: 17:30 GMT, Feb 8, 2018 |
0 Comments
1123
This post was written by : Litharsan

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை வேட்டையாடியும் ஆதரவாளர்களை வீட்டுக்குள் முடக்கிவைத்துமே கிழக்கில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஆட்சியமைத்ததாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இறுதி தேர்தல் பிரசாரக்கூட்டம் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகரசபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு, கூழாவடி டிஸ்கோ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், “தமிழ் மக்களின் ஒரே தெரிவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே உள்ளது. ஏனைய கட்சிகளின் சீத்துவங்களை அனைவரும் அறிவர்.

கடந்த காலத்தில் தமிழர்களைக் கொன்று குவித்தவர்களும் படுகொலை செய்தவர்களும் மற்றும் கடத்திச்சென்று காணாமல் ஆக்கியவர்களுமே இன்று தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்டு வருகின்றனர்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் செய்த அநியாயங்களை மட்டக்களப்பு மக்கள் ஒருபோதும் மறந்திருக்கமாட்டார்கள். கடந்த காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை அடக்கி, அவர்களை வெளியில் விடாமல் செய்தே முன்னர் அவர்கள் ஆட்சியமைத்தனர். ஆனால் இன்று மக்கள் சரியான பாடத்தினை அவர்களுக்கு புகட்டுவர்” என்றார்

DSC03238

DSC03241

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg