Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பல்லாயிரம் பேர்களின் மன்னிப்பைப் பெறும் குழந்தைகள்! – அவுஸ்ரேலிய பிரதமரின் அறிவிப்பு

In
Updated: 19:00 GMT, Feb 8, 2018 | Published: 18:56 GMT, Feb 8, 2018 |
0 Comments
1121
This post was written by : Litharsan
6776084-3x2-940x627

அவுஸ்ரேலிய நிறுவனங்களில் பாலியல் தொந்தரவுகளுக்குள்ளான குழந்தைகளிடம் தேசிய மன்னிப்புக் கோரவுள்ளதாக அவுஸ்ரேலிய பிரதமர் மால்கம் டிரன்புல் தெரிவித்துள்ளார்.

தேவாலயங்கள், பள்ளிகள் மற்றும் விளையாட்டு மன்றங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் பல தசாப்தங்களாக இந்தத் தொந்தரவுகள் நிகழ்ந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

4 ஆண்டுகள் நடைபெற்ற விசாரணையில் பல்லாயிரம் குழந்தைகள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்தே இந்தத் தேசிய மன்னிப்பு குறித்து பிரதமர் அறிவித்துள்ளார்.

மேலும் பாலியல் தொந்தரவுகளில் இருந்து தப்பிப் பிழைத்தவர்களின் ஆர்வத்தைப் பிரதிபலிக்கும் வகையிலும், குழந்தைகளுக்கு உரிய கண்ணியத்தை வழங்கும் வகையிலும் இந்த நிகழ்வை ஒரு தேசமாக நாம் அனுசரிக்கவேண்டும் என்று குறிப்பிட்ட அவர், குழந்தைகளுக்கு உரிய கண்ணியத்தை அவர்களைப் பாதுகாக்கவேண்டியவர்களே மறுத்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

தேசிய மன்னிப்புச் செய்தியில் என்ன இடம் பெறவேண்டும் என்பது குறித்து இந்த தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டவர்களிடம் கலந்தாலோசிக்க உள்ளதாகவும், இந்த மன்னிப்பானது இவ்வாண்டின் இறுதியில் கோரப்படும் என்று பிரதமர் மால்கம் டிரன்புல் மேலும் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)