Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திரிபுராவின் உயர்வை காண்பதற்கு பா.ஜ.க.விற்கு வாக்களியுங்கள்: பிரதமர்

In இந்தியா
Updated: 18:56 GMT, Feb 9, 2018 | Published: 03:55 GMT, Feb 9, 2018 |
0 Comments
1112
This post was written by : Kemasiya
juy

திரிபுரா மாநிலத்தின் உயர்வை காண்பதற்கு அத்தொகுதியில் பா.ஜ.க.வின் ஆட்சி அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (வியாழக்கிழமை) திரிபுராவின் சோனமுரா பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மேற்படி தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், “திரிபுரா மாநிலம் புதிய உயர்வைத் தொட விரும்புகிறது. அத்தொகுதி மக்கள் வேலைவாய்ப்பை எதிர்பார்க்கிறார்கள்.

இந்த தொகுதியின் ஏழை மக்களிடம் கொள்ளை அடித்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்.

இளைஞர்களின் வளர்ச்சி அவசியம். அதற்காக கைகொடுக்க வேண்டும். இவை எல்லாம் இத்தொகுதியில் எதிர்பார்க்கப்படும் விடயங்களாக உள்ளபோது பா.ஜ.க.வின் ஆட்சி திரிபுராவிற்கு அவசியம்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

திரிபுரா மாநிலத்தின் சட்டசபைத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி 18ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் 51தொகுதிகளில் பா.ஜ.க. வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

இந்நிலையில் தனது கட்சிக்கான தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றும் போதே பிரதமர் மேற்படி தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)