Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ராணுவத்தின் கீழுள்ள பாடசாலைகள் கல்வியமைச்சிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்: ஐ.நா.

In இலங்கை
Updated: 14:16 GMT, Feb 9, 2018 | Published: 04:07 GMT, Feb 9, 2018 |
0 Comments
1174
This post was written by : Risha
UN

ராணுவத்தினரால் தற்போது நடத்தப்படும் அனைத்துப் பாடசாலைகளும் மீண்டும் கல்வி அமைச்சின்கீழ் கொண்டுவரப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் குழுவொன்று இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவின் இலங்கை குறித்த பரிந்துரைகள் நேற்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டன. அதில் இந்த பரிந்துரையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேலும், முழுசுயாதீனமாக இயங்கும் வகையில் காணாமல் போனோர் அலுவலகத்தை நடைமுறைப்படுத்துவதுடன், யுத்தம் இடம்பெற்ற காலங்களில் சிறுவர்களாக இருந்தவர்கள் மற்றும் இன்னும் காணாமல் போயுள்ளவர்கள் ஆகியோர் தொடர்பாக உரிய அவதானத்தை அரசாங்கம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான ஐ.நா குழு ஜனவரி மாதம் 15ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 2ம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெற்ற அதன் கடைசி அமர்வின்போது இலங்கை, ஸ்பெயின் உட்பட எட்டு நாடுகளின் நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)