Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாமர் மசூதி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

In இந்தியா
Updated: 18:57 GMT, Feb 9, 2018 | Published: 04:39 GMT, Feb 9, 2018 |
0 Comments
1163
This post was written by : Kemasiya

அயோத்தியின் பாமர் மசூதி வழக்கை உயர் நீதிமன்றம் எதிர்வரும் 14ஆம் திகதிக்கு மீண்டும் ஒத்திவைத்துள்ளது.

இந்து-முஸ்லிம்களின் மதமோதலை வெளிப்படுத்து குறித்த வழக்கு நேற்றைய தினம் (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, “மொழிபெயர்க்கப்பட்டு தாக்கல் செய்யக்கோரிய சில ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை” என உத்தரவிட்டு நீதிபதிகள் குறித்த வழக்கை ஒத்திவைத்தார்.

பாமர் மசூதி 1992ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவையும் மீறி இடிக்கப்பட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 2.77 நிலம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து 60 ஆண்டுகளாக இந்த வழக்கு இடம்பெற்று வருகிறது.

இந்த வழக்கு 2010ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்தபோது குறித்த நிலத்தில் ஒரு பகுதியை நிர்மோகி அகாடா பரிஷத்துக்கும், மற்றொரு பகுதி ராமர் கோவில் கட்டவும், எஞ்சிய பகுதி முஸ்லிம்களின் சன்னி வக்பு வாரியத்திற்கும் சொந்தம் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால் மூன்று தரப்பும் குறித்த தீர்ப்பை ஏற்கமறுத்தது. இதனை மறுத்து மேன்முறையீடு செய்த மனுக்கள் நிலுவையில் உள்ள நிலையில் நேற்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg