Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வாக்குப் பெட்டிகள் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

In இலங்கை
Updated: 12:03 GMT, Feb 9, 2018 | Published: 04:32 GMT, Feb 9, 2018 |
0 Comments
1178
This post was written by : Risha

உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான தேர்தல்கள் நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை எடுத்துச்செல்லும் பணிகள் இன்று காலை முதல் நடைபெற்றுவருகின்றன.

யாழ். மாவட்டத்திற்கான பிரதான தேர்தல் நிலையமாக விளங்கும் யாழ். மத்திய கல்லூரியிலிருந்து வாக்குப் பெட்டிகள் பகிர்தளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தின் தேர்தல் வாக்கு பெட்டிகள் இன்று கிளிநொச்சி தேர்தல்கள் அலுவலகத்திலிருந்து அந்தந்த வாக்கு சாவடிகளிற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச சபைகளிற்கான தேர்தல்கள் இடம்பெறும் நிலையில் 100 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறித்த வாக்களிப்பு நிலையங்களிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இன்று வாக்கு பெட்டிகள் எடுத்து செல்லப்பட்டுள்ளன.

வவுனியா மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்கு பெட்டிகள் மாவட்ட செயலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வவுனியாவில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 599 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் அவர்கள் வாக்களிப்பதற்குரிய 148 நிலையங்களுக்கும் மாவட்ட செயலகத்தில் இருந்து வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான தேர்தல் நிலையமாக செயற்படும் மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் இருந்து வாக்குப்பெட்டிகளை கொண்டுசெல்லும் பணிகள் நடைபெற்றன.

அத்துடன், புத்தளம் மாவட்டத்திலுள்ள இரண்டு நகர சபைகள் மற்றும் 10 பிரதேச சபைக்கள் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு இன்று வெள்ளெிக்கிழமை  கொண்டு செல்லப்பட்டுள்ளன.

DSC03294 DSC03315

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg