Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தை சுற்றியுள்ள கடைகளை அகற்றும் பணிகள் ஆரம்பம்

In இந்தியா
Updated: 18:54 GMT, Feb 9, 2018 | Published: 05:01 GMT, Feb 9, 2018 |
0 Comments
1133
This post was written by : Kemasiya

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தை சுற்றியுள்ள கடைகளை அப்புறப்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்று (வெள்ளிக்கிழமை) நண்பகலுக்குள் கடைகள் அப்புறப்படுத்தப்படவேண்டும் என்ற மதுரை நீதிமன்றத்தின் கட்டளைக்கு இணங்க இந்தப் பணிகள் இடம்பெற்று வருகிறன.

முதற்கட்டமாக 22கடைகள் அகற்றப்பட்டு வரும் நிலையில், ஏனைய கடை உரிமையாளர்கள் தமக்கு மாற்றுவழி தந்தால் மாத்திரமே கடைகளை அகற்றுவோம் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் ஏனைய கடைகளையும் அகற்ற மாற்றுவழிகள் செய்துகொடுக்கப்படவுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து ஏனைய கடைகளும் அகற்றப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து ஆலயத்தின் வடக்குவாசல் பகுதி தீக்கிரைக்கு உள்ளானமை அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

ஆலயத்தைச் சுற்றியுள்ள வியாபாரக்கடைகளே மீனாட்சி அம்மன் ஆலயத்தில் தீ ஏற்படக்காரணமாகின.

இதனால் குறித்த கடைகள் தொடர்ந்தும் இருப்பது ஆலயத்திற்கும், பக்தர்களுக்கும் இன்னலைத்தான் கொடுக்கின்றது என்ற பெரும்பான்மை கருத்துக் கொண்ட மனுவை விசாரித்த நீதிமன்றம் கடைகளை அகற்றுமாறு நேற்று உத்தரவிட்டிருந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg