Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐஸ் ரி-ருவென்ரி கிரிக்கெட்: முதல் போட்டியில் அப்ரிடி தலைமையிலான ரோயல்ஸ் அணி வெற்றி

In கிாிக்கட்
Updated: 05:33 GMT, Feb 9, 2018 | Published: 05:33 GMT, Feb 9, 2018 |
0 Comments
1299
This post was written by : Anojkiyan

சுவிஸ்லாந்தில் நடைபெற்றுவரும் ஐஸ் ரி-ருவென்ரி கிரிக்கெட் தொடரில், சேவாக் தலைமையிலான பெலஸ் டைமண்ட்ஸ் அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாயிட் அப்ரிடி தலைமையிலான ரோயல்ஸ் அணி வெற்றிபெற்றது.

சுவிஸ்லாந்தின் ஆல்ப்ஸ் பனிமலைத் தொடரில் கடல் மட்டத்தில் இருந்து 5910 அடி உயரத்தில் அமைந்துள்ள செயின்ட் மோரிட்ஸ் ரிசார்ட் பகுதியில் உள்ள பனிக்கட்டி மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற போட்டியில், சேவாக் தலைமையிலான டைமண்ட்ஸ் அணி, சாயிட் அப்ரிடி தலைமையிலான ரோயல்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பெலஸ் டைமண்ட்ஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய சேவாக் அதிரடியாக விளையாடி சேவாக் 31 பந்துகளில் நான்கு பவுண்டரிகளும், ஐந்து சிக்ஸர்களும் அடங்களாக 62 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் 31 பந்துகளில் 40 ஓட்டங்கள் எடுத்தார்.

ரோயல்ஸ் அணியின் பந்துவீச்சில் அப்துல் ரசாக் 4 விக்கெட்களும், சோயிப் அக்தர் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

இவர்களின் அதிரடியின் மூலம் டைமண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 164 ஓட்டங்கள் எடுத்தது.

இதைத்தொடர்ந்து 165 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ரோயல்ஸ் அணி, 15.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்கள் எடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக ஒவாயிஸ் ஷா 34 பந்துகளில் 74 ஓட்டங்கள் குவித்ததோடு போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)