Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எதிர்ப்புகளை தாண்டி வசூலில் சக்க போடுபோடும் பத்மாவதி திரைப்படம்

In சினிமா
Updated: 06:04 GMT, Feb 9, 2018 | Published: 05:44 GMT, Feb 9, 2018 |
0 Comments
1028
This post was written by : Velauthapillai Kapilan

பல்வேறுபட்ட சர்ச்சைகளை தாண்டி வெற்றிகரமாக ஓடும் ‘பத்மாவத்’ திரைப்படம் 450 கோடி ரூபாய் மேல் வசூலித்து வெற்றித் திரைப்படமாக வலம் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சித்தூர் ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான ‘பத்மாவத்’ படம், ராஜபுத்திர வம்சத்தினர் எதிர்ப்பை மீறி திரைக்கு வந்தது. இதில் ராணி பத்மினி கதாபாத்திரத்தில் நடித்துள்ள தீபிகா படுகோன் மீது கர்னி சேனா அமைப்பினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

தீபீகாவின் மூக்கை அறுப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு தருவதாகவும் அறிவித்துள்ளனர்.

இதனால் தீபீகா படுகோனேவுக்கு சென்ற இடமெல்லாம் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இத் திரைப்படத்தில் தீபிகா, ரன்வீர், ஷாஹித் கபூர் ஆகியோர் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg