Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

110 ஓட்டங்களுக்கு சுருண்டது பங்களாதேஷ் அணி!

In கிாிக்கட்
Updated: 05:59 GMT, Feb 9, 2018 | Published: 05:59 GMT, Feb 9, 2018 |
0 Comments
1473
This post was written by : Anojkiyan

இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸில் 110 ஓட்டங்களுக்கு சுருண்டது.

போட்டியின் இரண்டாவது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, மதிய இடைவேளைக்கு முன்னதாக சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்படி முதல் இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணி 112 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக மெஹூடி ஹசன் 38 ஓட்டங்களை பெற்றுகொண்டார். பந்து வீச்சில் சுரங்க லக்மால், அகில தனஞ்சய ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தற்போது இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வருகின்றது.

நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) டாக்கா மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய இலங்கை அணி, பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 222 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக குசல் மெண்டிஸ் 68 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் அப்துர் ரஸ்ஸாக் மற்றும் தைஜூல் இஸ்லாம் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg