Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி: மன்னார் அரசாங்க அதிபர்

In இலங்கை
Updated: 06:14 GMT, Feb 9, 2018 | Published: 06:14 GMT, Feb 9, 2018 |
0 Comments
1179
This post was written by : Risha

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும், தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான எம்.வை.எஸ். தேசப்பிரிய தெரிவித்தார்.

உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”மன்னார் மாவட்டத்தில் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன.

தேர்தல் கடமைக்காக விசேட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் 94 வாக்கெடுப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

47 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு 47 நிலைய அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். இம்முறை மன்னார் மாவட்டத்தில் சுமார் 86 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

ஆயிரம் அரச உத்தியோகஸ்தர்களும், பொலிஸ் அதிகாரிகளும் தேர்தல் கடமைக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இம்முறை மன்னார் மாவட்ட மக்களின் பூரண ஒத்துழைப்போடு சரியான முறையில் அமைதியாக தேர்தல் நடவடிக்கைகளை எதிர்பார்த்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg