Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

“படையப்பா” திரைப்படத்தின் இசையமைப்பாளர் யார்?

In சினிமா
Updated: 17:17 GMT, Feb 9, 2018 | Published: 06:26 GMT, Feb 9, 2018 |
0 Comments
1147
This post was written by : Velauthapillai Kapilan

படையப்பா படம் 1999 ஆம் ஆண்டு கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்தது.

இதற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில் இதில் வரும் ஒரு காட்சிக்கு அவருடன் உதவியாளராக பணியாற்றிய இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார் என கே.எஸ் ரவிக்குமார் கூறியுள்ளார்.

இந்த படத்தில் உள்ள ஒரு காட்சியில்  ரஜினி நீண்ட காலம் கழித்து நீலாம்பரியை பார்க்கச் செல்வார் ஆனால் நீலாம்பரியோ அமர்ந்திருக்க கதிரை இல்லாமல் ரஜினியை நிற்க வைப்பார்  அந்த சமயத்தில் மேலே இருக்கும் ஊஞ்சலை தன் துண்டால் கீழே இறக்கி உட்காருவார்.

இந்த காட்சியில் ஒரு தீம் மியூசிக் வரும் இது மிகவும் பிரபலமானது. இதில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், நாசர், மணிவண்ணன், அப்பாஸ் எனப் பலரும் நடித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg