Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலகின் அதிகூடிய சம்பளத்தை நிராகரித்தார் மெஸ்ஸி!

In உதைப்பந்தாட்டம்
Updated: 06:54 GMT, Feb 9, 2018 | Published: 06:54 GMT, Feb 9, 2018 |
0 Comments
1206
This post was written by : Anojkiyan

உலகின் புகழ் பூத்த கால்பந்து வீரரான அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, ஒரு வாரத்திற்கு 1.7 மில்லியன் பவுண்ஸ்கள் என சம்பளத்தை நிராகரித்துள்ளமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல கழக அணியான பார்சிலோனாவிற்கு விளையாடிவரும் லியோனல் மெஸ்ஸியை வாங்க விருப்பம் தெரிவித்துள்ள சீன கழக அணியொன்று, பார்சிலோனாவிற்கு 622 மில்லியன் பவுண்ஸ்கள் கொடுக்கவும், மெஸ்சிக்கு ஒரு வாரத்திற்கு 1.7 மில்லியன் பவுண்ஸ்கள் கொடுக்கவும் தயராகவுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆனால், சீன கழக அணிக்கு விளையாடி தனது புகழை இழக்க விரும்பாத மெஸ்ஸி, இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். உலகிலேயே அதிக சம்பளம் என்ற தொகையை மெஸ்ஸி இவ்வாறு நிராகரித்துள்ளமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த வருடம் இறுதியில் பார்சிலோனா அணி மெஸ்சியுடனான ஓப்பந்தத்தை 2021ஆம் ஆண்டு வரை நீட்டித்துள்ளது. மெஸ்சிக்கான விலை சுமார் 600 மில்லியன் பவுண்ஸ்கள் என பார்சிலோனா நிர்ணயித்தது.

தற்போதும் உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் வீரராக மெஸ்சிதான் திகழந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)