Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெருவில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமிக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டம்

In உலகம்
Updated: 07:00 GMT, Feb 9, 2018 | Published: 07:00 GMT, Feb 9, 2018 |
0 Comments
1092
This post was written by : Elakkiya

பெருவில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 11 வயது சிறுமிக்கு நீதிகோரி தலைநகர் லிமாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பெருவில் இடம்பெறும் வன்முறைகளுக்கு எதிராகவும் சிறுமிக்கு நீதி வேண்டியும் நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடி நேற்று (வியாழக்கிழமை) இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

‘எமது குழந்தைகளின் அமைதி, பாதுகாப்பு, நீதிக்கான பேரணி’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.

சமீபத்தில் பாடசாலைக்கு வெளியில் கடத்திச் செல்லப்பட்ட ஜிமேனா ரெனஸ் என்ற 11 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு உட்படுத்தப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டிருந்தார். கடத்திச் செல்லப்பட்ட மறுநாள் எரிக்கப்பட்ட நிலையில் குறித்த சிறுமி கண்டெடுக்கப்பட்டார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் மென்டோசா கடந்த 2014 மற்றும் 2016 ஆம் ஆண்டிலும் இருவேறு பாலியல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg