Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையில் முதல்முறையாக கலப்பு முறை தேர்தல்: ஆராய வெளிநாட்டு குழு

In இலங்கை
Updated: 07:05 GMT, Feb 9, 2018 | Published: 07:05 GMT, Feb 9, 2018 |
0 Comments
1292
This post was written by : Risha

இலங்கையில் இம்முறை முதல் தடவையாக கலப்பு முறையில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அது தொடர்பான ஆய்வுகளை முன்னெடுக்கும் வகையில் வெளிநாட்டு குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.

அதன்படி, இந்தியாவிலிருந்து நால்வரும், தென்கொரியா, மாலைதீவு மற்றும் இந்தோனேசியாவிலிருந்து தலா இருவரும்; வருகை தந்துள்ளனர்.

இவர்கள் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களுக்கு விஜயம் செய்து வாக்களிப்பு நடைமுறைகள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வர்.

அதன் பின்னர் தமது நாட்டிற்கு இது தொடர்பான ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாக தேர்தல் திணைக்களத்தின் மேலதிக ஆணையார் எம.;எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இம்முறை முதல்முறையாக விகிதாசாரம் மற்றும் தொகுதிவாரியிலான கலப்பு முறையில் உள்ளுராட்சிமன்ற தேர்தல்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg