Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.எஸ்.எல்.: கேரளா-கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் நிறைவு

In உதைப்பந்தாட்டம்
Published: 07:09 GMT, Feb 9, 2018 |
0 Comments
1092
This post was written by : Anojkiyan
col

4வது இந்தியன் சுப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரின் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. மற்றும் அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டி, சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) கொல்கத்தாவில் நடைபெற்ற 67வது லீக் போட்டியில், இரு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாடின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தின் 33வது நிமிடத்தில், கேரளாவின் குட்ஜோன் பல்ட்வின்சன் முதல் கோல் அடித்து அணியை முன்னிலை படுத்தினார். இதையடுத்து 38வது நிமிடத்தில் கொல்கத்தா அணியின் ரியான் டெய்லர் பதில் கோல் அடித்து கோல் கணக்கை சமநிலைப்படுத்தினார். இதன்பின்னர் கோல் அடிக்காததால் முதல் பாதி நேர ஆட்டம் 1-1 என சமனானது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 55வது நிமிடம் கேரளா அணியின் டிமிடர் பெர்பாடோவ் கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து 75வது நிமிடம் கொல்கத்தாவின் டாம் தோர்பே கோல் அடித்தார்.

அதன்பின் இறுதிவரை இரு அணிகளாலும் வெற்றிக்கான கோலை புகுத்த முடியவில்லை. இதனால் போட்டி 2-2 என சமநிலைபெற்றது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.

கேரளா அணி 22 புள்ளிகளுடன் தொடர்ந்து ஐந்தாவது இடத்திலும், கொல்கத்தா அணி 14 புள்ளிகளுடன் தொடர்ந்து எட்டாவது இடத்தில் நீடிக்கிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)