Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழகத்தில் அமையவுள்ள புற்றுநோய் வைத்தியசாலைகள்

In இந்தியா
Updated: 18:50 GMT, Feb 9, 2018 | Published: 12:24 GMT, Feb 9, 2018 |
0 Comments
1105
This post was written by : Kemasiya

தமிழகத்தில் இரண்டு புற்றுநோய் வைத்தியசாலைகளை அமைப்பதற்கு மத்தியஅரசு நிதி ஒதுக்கியுள்ளது.

அடையாறு மற்றும் திருச்சி ஆகிய இருபிரதேசங்களிலும் இந்த வைத்தியசாலைகள் அமையவுள்ளதாக இன்று (வெள்ளிக்கிழமை) மத்திய அமைச்சர் அனுப்பிரியா பட்டேல் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

அடையாறில் அமையவுள்ள மருத்துவமனைக்கு 120கோடி ரூபா நிதியும், திருச்சியில் அமையவுள்ள வைத்தியசாலைக்கு 45கோடி ரூபா நிதியும் மத்திய அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது என அனுப்பிரியா பட்டேல் கூறியுள்ளார்.

புதிய வரவுசெலவுத்திட்டத்தில் தமிழகத்திற்கு மத்தியஅரசு போதுமான நிதியை ஒதுக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றநிலையில், வைத்தியம் மற்றும் சுகாதாரத்துறையில் தமிழகத்திற்கே அதிகளவில் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பா.ஜ.க.வினை சேர்ந்த பலரும் தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg