Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தங்க பிஸ்கட்டுகளை கடத்தி செல்ல முற்பட்ட பெண் கைது!

In இலங்கை
Updated: 16:07 GMT, Feb 9, 2018 | Published: 16:07 GMT, Feb 9, 2018 |
0 Comments
1166
This post was written by : poovannan

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு தங்க பிஸ்கட்களை கடத்தி செல்ல முற்பட்ட இலங்கைப் பெண் ஒருவர் இன்று (வெள்ளிக்கிழமை) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயவர்தன தெரிவித்தார்.

கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சுமார் 24 இலட்சம் ருபா பெறுமதியான நான்கு தங்க பிஸ்கட்டுகளுடன் கைது செய்யப்பட்டார்.

இலங்கை விமான நிறுவனத்திற்கு சொந்தமான யூ.எல். 129 என்ற விமானம் மூலம் இந்தியா நோக்கி புறப்பட இருந்த நிலையில் இவரிடம் இருந்து குறித்த தங்கம் சுங்கப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணை கைது செய்துள்ள விமான நிலைய சுங்கப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயவர்தன மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg