Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொழும்பிலுள்ள அமெரிக்க நிலையம் 2ஆவது தடவையாக மூடப்பட்டது

In இலங்கை
Updated: 16:44 GMT, Feb 9, 2018 | Published: 16:41 GMT, Feb 9, 2018 |
0 Comments
1222
This post was written by : poovannan

அமெரிக்க காங்கிரசில் செலவின பிரேரணை குறிப்பிட்ட நேரத்திற்குள் நிறைவேற்றப்படாததால் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக அரசு அலுவலகங்கள் கதவடைப்புக்கு (“ஷட்டவுன்”) உள்ளாகியுள்ளது.இதன் காரணமாக கொழும்பிலுள்ள அமெரிக்க நிலையம் இரண்டாவது தடவையாக இவ்வருடத்தில் மூடப்பட்டுள்ளது. மேலதிகள் அறிவித்தல் வரும்வரையில் அமெரிக்க நிலையம் மூடப்பட்டிருக்கும் என அமெரிக்கத்தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கடவுச் சீட்டு மற்றும் விஸா சேவைகள் தொடரும் எனவும் அமெரிக்கத்தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அமெரிக்காவில் அரசு பணிகளை கவனிக்க நிதியளிக்கும் செலவின பிரேரணை செனட் சபையில் நிறைவேறாததால் கடந்த மாதம் 19ஆம் திகதி அரசு அலுவலகங்கள் நடப்பாண்டில் முதன்முறையாக மூடப்பட்டன.

அத்தியாவசிய துறைகள் மட்டுமே இயங்கி வந்தன. எல்லை பாதுகாப்பு மற்றும் மெக்சிகோ சுவருக்கு நிதி, சிறுவயதில் குடியேறியவர்களுக்கு பாதுகாப்பு ஆகியவை குறித்து ஜனாதிபதி டரம்பின் கொள்கையில் முரன்பாடு கொண்ட ஆளும்கட்சி எம்.பி.க்கள் பிரேரணை நிறைவேறுவதற்கு தடையாக நின்றனர்.

செலவின பிரேரணையை நிறைவேற்றுவதில் எதிர்க்கட்சி (ஜனநாயக கட்சி) அரசியல் நாடகம் நடத்துவதாக குடியரசு கட்சி குற்றம் சாட்டியது. இதனையடுத்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் பிரேரணை நிறைவேற ஜனநாயக கட்சி உறுதியளித்தது. அதனை அடுத்து கதவடைப்பு முடிவுக்கு வந்தது.

செலவின பிரேரணையை நிறைவேற்ற பிப்ரவரி 8ஆம் திகதி வரை கால அவகாசம் இருந்த நிலையில், செனட் சபையில் நள்ளிரவு வரை இது தொடர்பான விவாதம் நடந்தது.

9 மணி நேர விவாதத்திற்கு பின்னர் குடியரசு கட்சி உறுப்பினர் ரண்ட் பால் ஆதரவாக வாக்களித்தார்.

இதற்கிடையே பிரேரணை நிறைவேறுவது நள்ளிரவை தாண்டியதால் மீண்டும் அதிகாரப்பூர்வமாக கதவடைப்பு செய்யப்பட்டது. செனட் சபையில் சற்று நேரத்திற்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட பிரேரணை பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கும் நிறைவேற்றிய பின்னர் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்ட பின்னர் கதவடைப்பு முடிவுக்கு வரும்.

ஆனால் பிரதிநிதிகள் சபையில் பிரேரணையை நிறைவேற்றுவதில் சிக்கல் இருந்தால் கதவடைப்பு இன்னும் சில நாட்களுக்கு தொடரலாம் என கூறப்படுகிறது.

இன்று அரசு அலுவலகங்கள் இயங்குமா? அடைக்கப்படுமா? என ஊழியர்கள் விடிய விடிய காத்திருக்கின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg