Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முடிவுக்கு வந்தது அமெரிக்க அரசாங்க நெருக்கடி

In
Updated: 02:16 GMT, Feb 10, 2018 | Published: 16:55 GMT, Feb 9, 2018 |
0 Comments
1091
This post was written by : poovannan

அமெரிக்க அரசாங்கப் பணிகளுக்கு அடுத்த இரண்டாண்டுகளுக்கு நிதியளிக்கும் நிதிநிலை பிரேரணையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டதால் அங்கு நிலவிய நெருக்கடி நிலை முடிவுக்கு வந்தது.

முன்னதாக அந்த பிரேரணைக்கு ஆதரவாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரண்டு சபை உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர்.

இதன் மூலம் கடந்த மூன்று வாரங்களில் இரண்டாவது முறையாக முடங்கிப்போன அமெரிக்க அரசாங்கப் பணிகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப உள்ளது.

முன்னதாக, ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த மத்திய நிதி காலாவதியாவதற்குள் ஒரு புதிய வரவு செலவுத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், குடியரசு கட்சியின் செனட் உறுப்பினர் ரேண்ட் பால்இ செலவினம் தொடர்பான வரம்புகளை பராமரிப்பதில் தான் கொண்டுவந்த திருத்தங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று சபையில் கோரிக்கை விடுத்த போது பிரேரணை மீதான விரைவு வாக்கெடுப்பு கனவுகள் தகர்ந்து போனது.

கடந்த ஜனவரி மாதம் இதே போன்று ஒரு தோல்வியினால் அமெரிக்க அரசாங்கத்தின் பணிகள் மூன்று நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.

நேற்றைய தினம் (வியாழக்கிழமை), செனட் உறுப்பினர் ரேண்ட் பால் தொடர்ந்து தனது வாக்கை பதிவுசெய்ய தாமதித்து வருவதால், ஒரு சாத்தியமான வேலை நிறுத்தத்துக்கு தயாராகி வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது.

இந்த சமீபத்திய ஒப்பந்தத்தில் செலவினம் தொடர்பான வரம்புகளை 300 பில்லியன் டாலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த வரம்பு அதிகரிப்பிற்கு தான் ஆதரவு தெரிவிக்க முடியாது என்று செனட் உறுப்பினர் பால் வலியுறுத்தியிருந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg