Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிலிப்பைன்ஸிற்கான உலங்கு வானூர்தி விநியோகம் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு!

In உலகம்
Updated: 12:00 GMT, Feb 14, 2018 | Published: 02:43 GMT, Feb 14, 2018 |
0 Comments
1165
This post was written by : Litharsan

கனடாவின் 16 உலங்குவானூர்திகளை பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு விநியோகிக்கும் திட்டம் தொடர்பில் விசாரணை நடத்த கனடாவின் அனைத்துலக வர்த்தக அமைச்சு உத்தரவிடப்பட்டுள்ளது.

கனடா 16 உலங்குவானூர்திகளை பிலிப்பைன்ஸிற்கு விநியோகிக்க உள்ளதுடன், இதனைத் மீட்பு நடவடிக்கைகளுக்கும் மற்றும் அனர்த்த உதவித் திட்டங்களுக்கும் மட்டுமே அவை பயன்படுத்தப்படும் என்று பிலிப்பைன்ஸ் தெரிவித்திருந்தது. ஆனால் இந்த உலங்குவானூர்திகள் உள்நாட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் என்று பிலிப்பைன்ஸ் இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்தே மொன்றியல் தயாரிப்பு உலங்குவானூர்தி விநியோகத் திட்டத்தினை மீளாய்வு செய்யுமாறு கனடாவின் அனைத்துலக வர்த்தக அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் அதிக அளவிலான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கிவரும் நிலையில், அந்நாட்டு இராணுவத்தின் மூத்த அதிகாரியின் இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸில் இஸ்லாமிய ஆயுத தாரிகளுக்கும், கம்யூனிஸ்ட் கிளர்ச்சியாளர்களுக்கும் எதிராகப் போரிட்டுவரும் அந்நாட்டு இராணுவம், நீதிக்கு முரணான கொலைகளிலும், மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டு வருவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg