Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மெக்சிக்கோவில் 52 குடியேற்றவாசிகள் மீட்பு

In உலகம்
Updated: 03:49 GMT, Feb 10, 2018 | Published: 03:49 GMT, Feb 10, 2018 |
0 Comments
1107
This post was written by : Suganthini

மெக்சிக்கோவின் துறைமுக நகரான வெரகுருஸில், கௌதமாலாவைச் சேர்ந்த 52 குடியேற்றவாசிகளை மீட்டுள்ளதாக, மெக்சிக்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெரகுருஸில் டிரக் வண்டியொன்றை நேற்று (வெள்ளிக்கிழமை) வழிமறித்து பொலிஸார் சோதனை செய்தபோது, அவ்வண்டியினுள் மேற்படி குடியேற்றவாசிகள் இருந்தமை தெரியவந்தது.

வடக்கு அமெரிக்காவினுள் நுழையும் நோக்கில் இவர்கள் பயணித்துள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலானவர்கள், 13 வயது முதல் 17வயதுவரையானவர்களெனவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், மேற்படி குடியேற்றவாசிகளை கௌதமாலாவுக்குத் திருப்பியனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg