Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரிசோனா ஹெலிகொப்டர் விபத்து: பிரித்தானியப் பிரஜைகள் உயிரிழப்பு

In
Updated: 05:52 GMT, Feb 12, 2018 | Published: 05:52 GMT, Feb 12, 2018 |
0 Comments
1135
This post was written by : Suganthini

அமெரிக்காவின் அரிசோனா பகுதியிலுள்ள கிராண்ட் கான்யன் பள்ளத்தாக்கில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில், பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள்  உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி பகுதியில் சுற்றுலாப் பயணிகளுடன் பயணித்த ஹெலிகொப்டரொன்று, நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) விபத்துக்குள்ளானது. இதன்போது, ஹெலிகொப்டரிலிருந்த மூவர் உயிரிழந்ததுடன், 4 பேர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து இடம்பெற்ற வேளையில், மேற்படி ஹெலிகொப்டரில் விமானியுடன், பிரித்தானியப் பிரஜைகள் 6 பேர் இருந்துள்ளதாகவும், பொலிஸார் இன்று (திங்கட்கிழமை) கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg