Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வளைகுடா நாடுகளுடனான சந்திப்பு பலமானது: ஓமானில் பிரதமர் மோடி

In இந்தியா
Published: 07:01 GMT, Feb 12, 2018 |
0 Comments
1144
This post was written by : Kemasiya

‘வளைகுடா நாடுகளுடனான இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் முதலீடு குறித்த உறவு பலமானதும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததுமாக திகழ்கிறது ‘ என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) காலை ஓமான் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அங்கு ஓமான் நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்படி தெரிவித்துள்ளார்.

குறித்த விஜயத்தின் முதல் நிகழ்வாக அந்நாட்டு தலைவர் சுல்தான் கபூவோவுடன் சந்திப்பை மேற்கொண்கொண்ட மோடி, அதன்பின்னர் அந்நாட்டு மக்களுடனான சந்திப்பை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், ‘ஓமான் உட்பட இந்தியாவின் வளைகுடா நாடுகளுடனான உறவை இந்தியா தொடர்ந்தும் பேணிவருகின்றது’ எனக் கூறினார்.

மேலும் தன்னுடைய நான்கு வருட ஆட்சியில், இந்தியா மற்றும் வெளிநாடுகளுடன் இணைந்ததான தனது சேவை குறித்தும் பிரதமர் மோடி அந்நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொண்டார்.

அத்துடன் ஓமான்நாட்டு தலைவருடனான சந்திப்பின் போது, இரு நாட்டு உறவுநிலை குறித்தும், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக ஊடகமொன்று வெளியிட்டுள்ள தகவலின்படி தெரியவந்துள்ளது.

gjkgjk gkguk gkjugki

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)