Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானியா – தாய்லாந்து உறவை வலுப்படுத்த நடவடிக்கை!

In
Published: 06:34 GMT, Feb 12, 2018 |
0 Comments
1108
This post was written by : Suganthini

பிரித்தானியாவுக்கும் தாய்லாந்துக்குமிடையில் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடர்பாக, தாய்லாந்து உயர்மட்ட அதிகாரிகளுடன், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் பொரிஸ் ஜோன்ஸன் கலந்துரையாடியுள்ளார்.

தாய்லாந்துக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஜோன்ஸன், தாய்லாந்துப் பிரதமர் பிரயட் சான் ஓட்சா ( Prayut Chan-o- cha) மற்றும் தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர் Don Pramudwinai ஆகியோரை பாங்கொக்கில் இன்று (திங்கட்கிழமை) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, இரு நாடுகளுக்குமிடையிலான உறவை வலுப்படுத்துதல், வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவை பலப்படுத்துதல், சட்டவிரோத வனவள வியாபாரத்தை முடிக்குக் கொண்டுவருவதற்கான கூட்டு ஒத்துழைப்பு ஆகியவை தொடர்பாக இந்தச் சந்திப்பின்போது கவனஞ்செலுத்தப்பட்டது.

மியன்மார், பங்களாதேஷுக்கான விஜயத்தை கடந்த வாரம் முடித்த பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஜோன்ஸன் தற்போது தாய்லாந்துக்குச் சென்றுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)