Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குண்டு மீட்பு: லண்டன் விமான நிலையம் பூட்டு

In
Updated: 07:31 GMT, Feb 12, 2018 | Published: 07:31 GMT, Feb 12, 2018 |
0 Comments
1283
This post was written by : Suganthini

தேம்ஸ் நதிக்கரைக்கு அருகில் குண்டொன்று காணப்பட்டதைத் தொடர்ந்து, லண்டன் நகர் விமான நிலையம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு மூடப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டாம் உலக மகா யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டை ஒத்த குண்டொன்று தேம்ஸ் நதிக்கரைக்கு அருகில் காணப்பட்டதுடன், குண்டை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையில் பாதுகாப்புப் பிரிவினர் ஈடுபட்டனர். இந்நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கவனத்திற்கொண்டு மேற்படி விமான நிலையத்தை மூடியதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

விமான நிலையத்தை மூடியதால், விமானப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டதுடன், சுமார் 16 ஆயிரம் பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகியதாக, விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg