Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழர்கள் என்ற ரீதியில் உணர்ந்து செயலாற்றுங்கள் -யாழ். ஆயரின் வேண்டுகோள்

In இலங்கை
Updated: 14:40 GMT, Feb 12, 2018 | Published: 12:55 GMT, Feb 12, 2018 |
0 Comments
1231
This post was written by : poovannan

தமிழ் மக்களின் இன்றைய நிலையை உணர்ந்து செயலாற்றும்படி தமிழ் மக்களின் சார்பாகக் கேட்டுக்கொள்கின்றேன் என யாழ். ஆயர் கலாநிதி  ஜஸ்ரின்  பேணாட் ஞானப்பிரகாசம் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் அந்த அறிக்கையில், “இலங்கையின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தல் மிக நீண்ட காலத்தின் பின்னர் ஓரே நாளில் நிறைவு பெற்றுள்ளது. அத்துடன் வன்முறைகள் அற்ற நிலையில் அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது.

தொகுதி வாரித் தேர்தல் முறை 49 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒழிக்கப்பட்டுள்ளது. இப்போது விகிதாசார கலப்பு முறைகளின்படி வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் முடிவுகள் ஒரு சில இடங்களைத் தவிர கட்சிகள் இணைய வேண்டும் என்ற தேவையையே சுட்டி காட்டி நிற்கின்றன. இதுவே இன்றைய காலத்தின் தேவையுமாகும்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதற்கமைய, தமிழ் மக்களின் இன்றைய நிலையில், அவர்களின் அவசிய தேவைகளையும் முன்னுரிமைகளையும் கவனத்திற் கொண்டு எல்லா வேறுபாடுகளையும் மறந்து செயலாற்றுங்கள்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைவரிடமும் தமிழ் மக்களின் சார்பாக வேண்டிக்கொள்கின்றேன். அவ்வாறு உணர்ந்து செயலாற்ற இறைவன் உங்களை என்றும் வழிநடத்துவாராக” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg