Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதலமைச்சர்-ஸ்டாலின் சந்திப்பு: பேருந்து கட்டணக்குறைப்பு தொடர்பில் ஆலோசனை(2ஆம் இணைப்பு)

In இந்தியா
Updated: 03:34 GMT, Feb 13, 2018 | Published: 03:34 GMT, Feb 13, 2018 |
0 Comments
1171
This post was written by : Kemasiya

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) நண்பகல் 12 மணிக்கு இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது போக்குவரத்து கட்டணத்தை உயர்த்தாமல் போக்குவரத்து நிர்வாகத்தை எவ்வாறு மேம்பட நிர்வகிப்பது என முதலமைச்சருடன் தி.மு.க. செயல் தலைவர் ஆலோசித்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பில் தி.மு.க. மேற்கொண்ட ஆய்வு அறிக்கையையும் ஸ்டாலின் கையளித்துள்ளார்.

போக்குவரத்து கட்டண உயர்வை குறைக்குமாறு கோரி கடந்த மாதம் மு.க.ஸ்டாலின் முதல்வருடன் தொலைபேசியில் கலந்துரையாடியிருந்தார். ஆனால் அதில் எந்தப் பயனும் கிடைக்கவில்லை என்பதால், தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கட்டணத்தை குறைத்து போக்குவரத்து நிர்வாகத்தை எவ்வாறு சீராக நடத்துவது என்பது தொடர்பில் தி.மு.க. ஒரு ஆய்வினை மேற்கொண்டது.

குறித்த ஆய்வு அறிக்கையை போக்குவரத்து கட்டணக் குறைப்பின் மூன்றாவது செயற்பாடாக இன்று முதலமைச்சரிடம் ஸ்டாலின் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் – ஸ்டாலின் சந்திப்பு:  தீர்மானம் என்ன?

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்கிழமை) சந்திக்கவுள்ளார்.

சென்னையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் நண்பகல் 12.00 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தமிழக அரசின் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதன்போது போக்குவரத்துத் துறை தொடர்பில், தி.மு.க மேற்கொண்ட ஆய்வின் அறிக்கையை ஸ்டாலின் முதலமைச்சரிடம் ஒப்படைக்கவுள்ளார்.

மேலும் தமிழகத்தில் நிலவும் தற்போதைய பிரச்சினைகள் தொடர்பிலும் பேசப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தி.மு.க. சார்பில் நிர்ணயிக்கப்பட்ட போக்குவரத்து விடயங்களை ஆய்வு செய்யும் குழுவினர், நேற்றைய தினம் அவை தொடர்பான அறிக்கையை ஸ்டாலினிடம் கையளித்திருந்தனர். இந்நிலையில் இன்று குறித்த அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடியிடம் ஸ்டாலின் கையளிக்கவுள்ளார்.

vhjhgj

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)