Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜம்மு மீதான தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம்: சீதாராமன்

In இந்தியா
Updated: 05:38 GMT, Feb 13, 2018 | Published: 05:38 GMT, Feb 13, 2018 |
0 Comments
1124
This post was written by : Kemasiya

காஷ்மீரில் செயற்படும் தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் பணம் கொடுப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பொன்றிலேயே சீதாராமன் மேற்படி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் மிகப்பெரிய விலையைக் கொடுக்க நேரிடும்.

பயங்கரவாதிகள் பாகிஸ்தானிலுள்ள அசார் மசூத் தலைமையிலான ஜெய்ஸ் ஈ முகம்மது அஹமட் அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானிலிருந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. வழமைப்போன்று இம்முறையும் அவை தொடர்பான ஆதாரங்கள் பாகிஸ்தானிடம் வழங்கப்படும். இதற்கு முன்னரும் பல ஆதாரங்கள் கொடுக்கப்பட்டும் எவ்வித நடிவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

மாறாக மும்பைத் தாக்குதல்தாரி, மற்றும் பல்வேறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் அங்கு சுதந்திரமாக நடமாடுகின்றனர்.

பாகிஸ்தானிலிருந்து கொண்டு இந்தியாவில் தீவிரவாதிகள் இயக்கப்படுகிறார்கள் என்பதற்கு பல ஆதாரங்களை நாம் கையளிப்போம்” எனத் தெரிவித்தார்.

இந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ஜம்மு காஷ்மீர் எப்போதும் பதற்றத்திற்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளான பகுதியாகவே இருந்து வருகிறது. அங்கு இந்திய இராணுவ முகாம் மீது, பாகிஸ்தானிய தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு விஜயம் செய்த இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிலைமைகளை நேரில் அவதானித்துள்ளார். இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீதாராமன் மேற்படி தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)